ஓ குரூப் ரத்தமா உங்களுக்கு! அப்போ கொரோனா உங்களை பாதிக்காது! வேற எந்த குரூப்புக்கு எளிதில் கொரோனா பாதிக்கும்?

கொரோனா எங்களை பார்த்தாலே பறந்து ஓடும் என்று ஓ குரூப் ரத்தம் கொண்டவர்கள் மிகவும் தெனாவெட்டாக இருக்கிறார்கள். ஏனென்றால், ஓ குரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது என்று பரவியிருக்கும் செய்திதான்.


இதுகுறித்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கொடுத்திருக்கும் தகவலைக் கேளுங்கள். ஓ குரூப் ரத்த வகையினருக்கு மற்ற வகையினரை விடவும் 9% முதல் 18% வரை கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியிருக்கின்றனர்.

இதன் அர்த்தம் ஓ குரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது அல்லது மிக அரிதாக வரும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 7.5 லட்சம் கொரோனா நோயாளிகளை வைத்து செய்யப்பட்ட மீளாய்வில். அவர்களிடம் இருந்து கண்டறியப்பட்டதாக கூறப்படும் செய்திதான், ஓ குரூப் ரத்த வகையினருக்கு மற்ற வகையினரை விடவும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியிருக்கின்றனர்.

அவர்களும் கூட ஓ ரத்த வகயினருக்கு முற்றிலும் முதலுமாக கொரோனாவே வராது என்று கூறவில்லை. காரணம் அவர்கள் ஆராய்ச்சி செய்த அமெரிக்காவில் வாழும் கருப்பு இன அமெரிக்கர்களுள் ஓ வகை ரத்தம் இருப்பவர்களுக்கு ஏனைய உலகவாசிகளை விட அதிக அளவு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வின் முடிவில் ஏபி ரத்த குரூப் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. எனவே, அனைத்து ரத்த குரூப் வகையினரும் கொரோனாவிடம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.