மசிலிப்பட்டணம்: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மகளிர் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில் அழைத்தார்! பிறகு கெஞ்சினார்! இப்போது மிஞ்சுகிறார்! கல்லூரி உரிமையாளர் மீது தலித் நர்சிங் மாணவி பகீர் புகார்!
ஆந்திராவின் மசிலிப்பட்டணம் பகுதியில் கிரேஸ் நர்ஸிங் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, படித்து வரும் 22 வயதான மாணவி ஒருவர் சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார். அதில், ''எனது கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளராக உள்ள ரமேஷ் (42 வயது) என்பவர், செக்ஸ் உறவுக்கு இணங்கும்படி அடிக்கடி என்னை தொந்தரவு செய்கிறார். நான் மறுத்தாலும், என்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்,'' எனக் கூறியிருந்தார்.
இதன்பேரில் நிர்பயா சட்டம் 2013ன் படி, பெண்ணிடம் பாலியல் ரீதியான தொல்லை அளித்த பிரிவில் வழக்குப் பதிந்த போலீசார், கல்லூரி தாளாளரை கைது செய்தனர்.