சாப்பிட மறுத்த 4 வயது மகளை அடித்தே கொலை செய்த நர்ஸ் தாய்! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்!

கொல்லம்: சாப்பிட சொல்லி தாய் அடித்ததால், 4 வயது குழந்தை உயிரிழந்துவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.


கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசித்து வரும் பெண் ஒருவர், நர்ஸ் வேலை செய்து வந்தார். திருமணமாகி, குழந்தை பிறந்த நிலையில், நர்ஸ் வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருந்தபடி குழந்தையை பராமரித்து வந்தார். அவரது பெண் குழந்தைக்கு 4 வயதான நிலையில் சமீபத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறது.  

காய்ச்சல் காரணமாக, சிறுமி சரிவர சாப்பிடாமல் அடம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தாய் கடுமையாக அடித்துள்ளார். இதில் காயமடைந்த சிறுமி, கீழே விழுந்து மூர்ச்சையாகியுள்ளார். உடனடியாக, உறவினர்கள் அவரை மீட்டு மருத்தவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், சிறுமி முன்கூட்டியே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவிக்க, தாய் அடித்ததுதான் இதற்கு காரணம் எனக் கூறி, சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.