லாப நடை போடும் என்.டி.பி.சி. நிறுவனம்! அடுத்தகட்ட திட்டங்கள் ரெடி!

மத்திய அரசு பொதுத்துறை மின்வாரிய நிறுவனமான என்டிபிசி செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் நிகர லாபமாக 3,408.92 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.


என்டிபிசி லிமிடெட் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும், இது மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மத்திய அரசு மற்றும் மாநில மின்சார வாரியங்களுக்கு மின்சாரம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் பொறியியல் துறை.மின்‌வாரியத்தின் திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டு மேலாண்மை ஆகியவற்றிற்கு ஆலோசனை மற்றும் தயாரிப்பு திட்ட ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி எண்ணெய் எரிவாயு ஆய்வு மற்றும் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். இந்நிறுவனம் கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 2,477.28 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் என்டிபிசியின் மொத்த வருமானம், ரூ.51,546.79 கோடியாக உள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இதன் வருவாய் ரூ. 47,715.15 கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

நிறுவனம் லாபத்தை நோக்கி பயணிப்பதன் காரணமாக கடந்த சனிக்கிழமை அதன் இயக்குநர்கள் குழு. நாபினகர் மின் உற்பத்தி நிறுவனம் லிமிடெட் மற்றும் காந்தி பிஜ்லீ உத்படன் நிகம் லிமிடெட் ஆகியவற்றை என்டிபிசி லிமிடெட் உடன் இணைப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி