நயன்தாரா மட்டுமல்ல! அசினையும் சீண்டிய ராதாரவி!

தற்போது நயன்தாரா குறித்து ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு உள்ள ராதாரவி சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை அசின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது தெரிய வந்திருக்கிறது.


கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரைத் தொடர்ந்து தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக வோ அல்லது சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கோ தமிழ் நடிகர் நடிகைகள் செல்லக்கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தது.

இந்த நிலையில் சல்மான்கானுடன் ரெடி எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக அசின் இலங்கை சென்று இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராதாரவி அசின் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை அப்போது முன்வைத்துள்ளார்.

மேலும் அசினை இரு தமிழ் திரைப்படங்களில் யாரும் நடிக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும் அதிரடியாக அறிவித்தார். நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி இப்படி அறிவித்ததால் அசின் எந்த படங்களிலும் நடிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.

அசின் போன்ற நடிகைகளுக்கு இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மிகக் கடுமையாக ராதாரவி அப்போது பேசி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களில் அசின் நடிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அசின் நயன்தாரா மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் பலரையும் ராதாரவி மிகக் கடுமையான வார்த்தைகளில் பேசி மனதை துன்புறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.