மின்வாரியத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வேலை ஏன்? வெளியானது அதிர்ச்சி தகவல்!

தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் தங்கமணி கூறியுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


மொடக்குறிச்சியில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் வெளிமாநிலங்களை சேர்ந்த 36 பேர் தமிழக மின் வாரியத்தில் பணி அமர்த்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தங்கமணி, மின்வாரியத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டே பணிநியம் நடைபெற்றுள்ளது. பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மற்ற மாநிலங்கள் மின்துறையில் பணி நியமனம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் அடிப்படையில் தகுதியானவர்கள் மின்வாரியத்தில் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்ளவில்லை என்றால் வேலை வாய்ப்பை இழப்பார்கள். இவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி பணியில் சேர்ந்துள்ளதால்  மாநில அரசு தலையிட முடியாது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது என்று தங்கமணி கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.