சுறா மீனிடம் ஒற்றைக் கையை பறிகொடுத்த 34 வயது தாய்! தவியாய் தவித்தவருக்கு தற்போது கிடைத்த ஆறுதல்! என்ன தெரியுமா?

கரோலினா: சுறா மீன் கடித்ததில் கையை இழந்த பெண்ணிற்கு, ரோபோட்டிக் கை பொருத்தப்பட்டுள்ளது.


நார்த் கரோலினா பகுதியை சேர்ந்தவர் டிஃபானி ஜான்சன். 34 வயதான இவர், பஹாமஸ் அருகே உள்ள  பாரடைஸ் தீவில் கடந்த 2017ம் ஆண்டு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு கடலில் சறுக்கி விளையாடியபோது,  அவரை சுறா மீன் பிடித்துக் கடித்துவிட்டது. இதனால், டிஃபானியின் வலது கை மூட்டில் இருந்து அப்படியே பிய்ந்துவிட்டது.  

முழங்கை இல்லாமல் போராடி வந்த டிஃபானி, ஒருவழியாக, தற்போது ரோபோட்டிக் சிகிச்சை முறையில், செயற்கை கை பெற்றுள்ளார். இதன்மூலமாக, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட முடிவதாக, டிஃபானி தெரிவிக்கிறார்.