தண்ணீர் பஞ்சத்தில் ஜலக் க்ரீடையா? முதல் எபிசோடிலியே கமல் பதித்த முத்திரை!

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் நீச்சல் குளத்தை எம்ப்டியாக வைத்து நடிகர் கமல் முத்திரை பதித்துள்ளார்.


பிக்பாஸ் வீடு என்றாலே அதனுடன் இணைந்து இருக்கும் நீச்சல் குளம் பிரபலம். வீட்டிற்குள் இருக்கும் நடிகைகள், பிரபலங்கள் அந்த நீச்சல் குளத்தில் குளிப்பதை காண ரசிகர்கள் காத்திருப்பார்கள். 100 நாட்கள் வீட்டில் இருந்தாலும் ஒன்று அல்லது 2 எபிசோட்களில் மட்டுமே நீச்சல் குள காட்சிகள் இடம்பெறும். மற்ற நாளைய காட்சிகள் ஹாட் ஸ்டாரில் பார்த்து ரசிக்கலாம்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் 3வது சீசனின் முதல் எபிசோட் துவங்கியது. வீட்டை நடிகர் கமல் சுற்றிக் காண்பித்தார். அப்போது நேராக நீச்சல் குளத்திற்கு சென்ற அவர் அங்கு தண்ணீர் இல்லை என்பதை நம்மிடம் எடுத்துரைத்தார். தமிழகமே தண்ணீருக்கு அள்ளாடும் போது இங்கு ஜலக்கிரீடை சரியாக இருக்காது என்பதால் நீச்சல் குளம் காலியாக இருப்பதாக அவர் கூறியது அனைவரையும் கவர்ந்தது. 

இதன் மூலம் பிக்பாஸ் முதல் எபிசோடிலேயே கமல் முத்திரை பதித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் வீட்டில் தண்ணீரை அளக்க கருவி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பட்டஅளவு மட்டுமே தண்ணீர் இங்கு பயன்படுத்த முடியும். இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்று கமல் கூறியுள்ளார்.