10 ரூபாய் நாணயத்துக்கே மதிப்பு இல்லே! 20 ரூபாய் என்னாத்துக்கு? நிர்மலாவுக்கு கடும் எதிர்ப்பு!

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் பா.ஜ.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.


இரண்டாவது ஆட்சியின் முதல் படஜெட் என்பதால் மக்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஆனால், ஏழைகளுக்கும் சாதாரணமானவர்களுக்கும் எங்களிடம் எதுவும் இல்லை என்பதுபோல், ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிர்மலா. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை, பார்வையற்றவர்களும் கண்டறியும் வகையில் வெளியிடப்படும் என்று அறிவித்த நிர்மலா சீதாராமன், புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இப்போது 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்தாலும், அதனை யாரும் மதிப்பது இல்லை. ஏனென்றால், அளவில் பெரிதாக இருப்பதும், வெயிட்டாகவும் இருப்பதால், பெரும்பாலான கடைகளில் இந்த நாணயத்தை யாரும் வாங்குவதில்லை. பஸ் கண்டக்டர்கள் கூட, இதனை திருப்பி தந்து விடுகிறார்கள். அதனால், இந்த லட்சணத்தில் 20 ரூபாய் நாணயம் எதற்காக என்று கேள்வி எழுகிறது.

கடந்த ஆட்சியில் கலர் கலராக நோட்டுகள் அச்சிடுவதில்தான் பா.ஜ.க. அரசு கவனம் செலுத்தியதே தவிர, மக்களுக்கு பணம் வருவதற்கோ, பணப்புழக்கத்துக்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதும் தேவையே இல்லாமல் 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் சந்தித்திருக்கிறார் நிர்மலா.