கமல் நாக்குக்கு ஆபத்து இல்லையாம்! மோடியின் ரேடார் காமெடிக்காகத்தான் பேசினாராம்!

இரண்டு நாட்களாக தீவிரவாதப் பேச்சு காரணமாக பதுங்கிக்கிடந்த கமல்ஹாசன் இன்று மீண்டும் பிரசாரத்துக்கு வந்துவிட்டார். கமல்ஹாசனுக்கு பிரதமர் மோடியே பதில் கொடுத்துவிட்டதால், இனிமேல் யாரும் பேசவேண்டாம் என்று பா.ஜ..க.வினரும் அ.தி.மு.க.வினரும் அடக்கப்பட்டார்களாம்.


அதனால், கமல்ஹாசனுக்கு எதிராக பெரிய அளவுக்கு மதுரையில் போராட்டம் நடத்த முயற்சி செய்த இந்து மக்கள் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் அப்படியே கலைந்து போனார்கள். இந்த விவகாரம் தெரிந்தவுடன் கமல் மீண்டும் கோட்சே பற்றி விளக்கம் கொடுத்துவிட்டார்.

மதச்செருக்கு, ஜாதி செருக்கு எல்லாம் என்னிடம் எடுபடாது என்று பேசியிருக்கும் கமல்ஹாசன், அவரது பேச்சால் யாருடைய மனதும் புண்படவில்லை என்றால், வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டார். 

மேலும், கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்பது சரித்திர உண்மை என்றும் தான் ஒன்றும் முதன்முதலாகவோ, புதுமையாகவோ சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆக, மோடியின் மேக நகைச்சுவையை மறைக்கத்தான் கமல்ஹாசன் இந்தப் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறார் என்பது உண்மைதானோ..?