ஜாமீன் கிடைச்சும் விடுதலை கிடைக்கலையே! சிறையில் திணறும் ப.சிதம்பரம்!

தீபாவளிக்குள் எப்படியாவது ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட வேண்டும் என்று சிதம்பரம் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தார்.


அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்றுதான் அமலாக்கத் துறையும் ஒரு வழக்கில் சிதம்பரத்தை கைது செய்தது. இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பினர் தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்துவிட்டனர் நீதிபதிகள்,.

ஏனென்றால் சிதம்பரம் உடல் எடை குறைந்துவிட்டார் என்றும் வெளிநாட்டுக்கு எங்கேயும் போக மாட்டார் என்றும் சிதம்பரம் சார்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.

அதையடுத்து, சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, இரு நபர் உத்தரவாதம் மற்றும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனிநபர் பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டுமென அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்த விஷயம் சிதம்பரத்துக்கு ஆறுதலான செய்தி என்றாலும் இன்னமும் அமலாக்கத்துறை விசாரணை முடிவடையவில்லை. அதனால் அமலாக்கத்துறை விவகாரத்திலும் ஜாமீன் பெற்றால்தான் விடுதலை பெற முடியும். இம்மாதம் 24ம் தேதி வரை அமலாக்கத் துறை காவல் சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது. 

அதனால் ஜாமீன் கிடைத்தும் வெளியே வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனாலே என்னவோ நீதி வென்றது என்ற ரீதியில் இன்னமும் ட்வீட் எதுவும் போடாமல் இருக்கிறார் சிதம்பரம்.