ஏழு பேருக்கும் இனி விடுதலை கிடையாதா..? நளினி வழக்கு தள்ளுபடி

உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று அறிவித்துவிட்டது.


தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை அனுப்பிவிட்டது. ஆனால், இன்னமும் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், நான் இப்போது சட்டவிரோதமாக காவலில் இருக்கிறேன். என்னை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நளினியை விடுவிக்க முடியாது என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். அவர் தன்னிச்சையாக செயல்படமுடியாது. தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாக நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். டிஸ்மிஸ் என்ற ஒரே வார்த்தையில் தங்களது தீர்ப்பையும் முடித்துக்கொண்டனர். 

நளினி மட்டுமல்ல, 7 பேரின் விடுதலைக்கும் சாத்தியமில்லை என்பதுதான் நிலைமை.