பணம் இல்லையென்றால் கட்சியில் பதவி இல்லை என்பதுதான் தி.மு.க.வின் பாலிசி.. அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள்..

கட்சிக்காக எத்தனை ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்து இருந்தாலும் பரவாயில்லை, பணம் இல்லையென்றால் அவருக்கு கட்சியில் பதவி இல்லை என்பதுதான் தி.மு.க.வின் பாலிசி. இந்த விவகாரம் வெளிப்படையாகத் தெரிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள், தி.மு.க. தொண்டர்கள் ..


தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தெற்கு மாவட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணனும், வடக்கு மாவட்டத்திற்கு தங்க தமிழ்ச்செல்வனும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், எல்.மூக்கையா, கம்பம் செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன் உள்ளிட்ட பாரம்பரிய திமுகவினரை ஓரங்கட்டிவிட்டு இரண்டு கட்சிமாறிகளுக்கு பதவி அளித்திருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுபோலவே ஆரம்பத்தில் அதிமுக,பிறகு திமுக, அதன்பிறகு மறுபடியும் தாவல், இடையில் சொந்தக் கட்சி என கடைவிரித்த ராஜகண்ணப்பனுக்கு தேர்தல் பணிக்குழு இணைத் தலைவர் பதவி தரப்பட்டிருப்பதை மூத்த நிர்வாகிகளே ரசிக்கவில்லை. தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக வேலூர் ஞானசேகரன், முன்னாள் அதிமுக அமைச்சர் டாக்டர் விஜய், பரணி கார்த்திகேயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ‘’ 

பாஜகவிலிருந்து ஜம்ப் ஆன பி.டி அரசகுமார் திமுக செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல தாமரை கட்சியிலிருந்து தாவிய வேதரத்னத்திற்கு விவசாய அணி இணைச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து சமீபத்தில் வந்த லட்சுமணன், தேமுதிகவிலிருந்து சேர்ந்த சம்பத்துக்கும் புதிய பதவிகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

பணம் உள்ளவர்கள், கொடுக்க வேண்டியதை கொடுத்து பதவிகள் வாங்கிடறாங்க. இதனால் உண்மைத் தொண்டர்கள் மனம் உடைஞ்சி நிற்கிறாங்க. இதன் பிரதிபலிப்பு வரும் தேர்தலில் நிச்சயம் தெரியும் என்கிறார்கள்.