கலைஞரை கண்ணில் வைத்து கவனித்த நித்யா! சம்பளத்தை கட் செய்து விரட்டிய ஸ்டாலின்! கோபாலபுரம் களேபரம்!

கருணாநிதிக்கு எல்லாமுமாய் இருந்தவர் நித்யா என்ற நித்தியானந்தம்.


தயாளு, ராஜாத்தியம்மாளைவிட, அதிகமான நேரம் கருணாநிதி நித்யாவுடன்தான் காலம் தள்ளினார். குறிப்பாக கடைசி சில வருடங்கள் முழுக்க முழுக்க நித்யாதான் கருணாநிதியின் வலது, இடது கரமாக விளங்கினார்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு நித்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஸ்டாலின். ஆம், அதுவரை நித்யாவுக்கு மாதாமாதம் கொடுத்துவந்த சம்பளத்தை கருணாநிதி செத்துப்போனதும் நிறுத்திவிட்டார். ஆனாலும், தொடர்ந்து கோபாலபுரத்துக்கு வந்தார் நித்யா.

அதற்கும் ஸ்டாலின் தடை போட்டார். கருணாநிதி இல்லாத சூழலில் இங்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்று கழுத்தைப் பிடித்து தள்ளப்பட்டார். கட்சியில் ஏதாவது பொறுப்பு வேண்டும் என்று நித்யா கேட்டதை அத்தனை நிர்வாகிகளும் காமெடியாகத்தான் பார்த்தார்கள்.

இந்த நிலையில்தான் கட்சி மாறுகிறாரா நித்யா என்று ஒரு இதழில் செய்தி வெளியானது. அதைப் பார்த்த ஸ்டாலின் ஆட்களிடம் இருந்து நித்யாவுக்கு அழைப்பு போயிருக்கிறது.

நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று வேகவேகமாக போன நித்யாவுக்கு செம ஆப்பு கிடைத்திருக்கிறது. ஆம், ‘நீ எந்தக் கட்சிக்கு வேணும்னாலும் போகலாம். பொறுப்பு எதுவும் கொடுக்க முடியாது’ என்று அந்த நிர்வாகி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டாராம்.

அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் நித்யா. கருணாநிதிக்கு கோயில் எல்லாம் கட்டுறாங்க, அவரை கண்ணுக்குள் வைச்சு பார்த்துக்கிட்ட நித்யாவை தூக்கிப் போட்டுட்டீங்களேப்பா.