நாம் உடம்பை எத்தனை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படவே செய்கிறது. சாப்பிடும் உணவு தொடங்கி சுற்றுச்சூழல், அழகுப் பொருட்கள் என்று பல்வேறு வகையினில் ஒவ்வாமை உண்டாகிறது. எவையெல்லாம் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் பார்க்கலாம்.
உலகில் அலர்ஜி இல்லாத மனிதன் இல்லை! உங்களுக்கு என்ன அலர்ஜி?

கரப்பான் பூச்சியும் அதன் எச்சங்களும் பூனை மற்றும் நாய் முடியும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மருந்துகள், சிகரெட் புகை, ரசாயனங்கள், வாசனைத் திரவியங்கள் காரணமாகவும் அலர்ஜி ஏற்படலாம்.
பூக்களின் மணம், பூஞ்சை, கடும் குளிர் காற்று போன்றவையும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கடுமையான உடற்பயிற்சி, மன அழுத்தம், உணர்ச்சிவசப்படுதல், வைரஸ் நோய்கள் காரணமாகவும் அலர்ஜி ஏற்படலாம்.
சைனஸ், நெஞ்சு எரிச்சல், ஜீரண கோளாறுகள் போன்றவை காரணமாகவும் ஒவ்வாமை ஏற்படலாம். ஒருவருக்கு ஒவ்வாமையாக இருப்பது மற்றவருக்கு எந்தத் தீங்கும் செய்யாதனவாக இருக்ககூடும். அதனால் ஒருவர் சொல்வதைக் கேட்டு எந்த உணவையும் விலக்கக்கூடாது. அனுபவரீதியாக கண்டு உணர்ந்தே தவிர்த்தல் வேண்டும்.