கோலம் போட்டால் கூட கைதா? இந்தியாவில் மட்டுமே சாத்தியம் ! கனிமொழி ஆவேசம் !

இந்தியாவில்தான் கோலம் போட்டால் கூட கைது செய்வார்கள் என்பதை தெரிந்து கொண்டதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது "நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன்.

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த சட்டத்திருத்தத்திற்கு பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு வீட்டில் இருக்கும் பெண்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெசன்ட் நகரில் தெருக்களில் மற்றும் சாலைகளில் பெண்கள் No to NRC, No to CAA என்ற வாசகங்களுடன் கோலமிட்டனர்.

இதை பார்த்த போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த 7 பெண்களை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுவித்தனர்.