இந்தப் பதிவுக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவுசெய்து ரஜினியை நினைச்சுப் படிக்காதீங்க.

இன்று மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஒரு விவகாரமான பதிவு போட்டிருக்கிறார். அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை படியுங்கள். ஆனால், ரஜினியை நினைத்துக்கொண்டு படிக்க வேண்டாம்.


‘‘மாமா நீங்க என்ன பண்றீங்க. உங்க பொண்ணை கூட்டிக்கிட்டு போய் கோவில்ல அவ கையாலயே தாலிய கட்டிக்க சொல்லுங்க. எனக்கு அவளுக்கும் கல்யாணம் நடந்துட்டதா ஊருக்கே சொல்லிடுங்க.. உங்க சொந்த பந்தங்களோட உங்க வீட்ல பொண்ணை வெச்சிக்கிட்டு விருந்து போட்டுட்டு, ராத்திரி வரைக்கும் காத்திருங்க..

சொந்தக்காரங்கள விட்டு சாந்தி முகூர்த்த அறையில அலங்காரம் பண்ணச்சொல்லுங்க.. பால் பழம், ஊதுவத்தின்னு அமர்க்களப்படுத்துங்க. நான் சரியா நைட்டு 10:22-க்கு வருவேன்.’’.

‘‘மாப்பிள்ளை ஒரேயொரு டவுட்டு கேட்டுக்கலாமா?’’

‘‘தாராளமாக கேக்கலாம் மாமனாரே..’’

‘‘நீங்க கட்டிக்கிட்டு வர்ற வேட்டியை நீங்க அவுத்துப்பீங்களா இல்ல, அதையும் நாங்கதான் வந்து அவுக்கணுமா?’’

லைன் கட்..