தமிழ் தெரியாதவங்களுக்கு வேலை வாய்ப்பு...? கொந்தளிக்கும் தமிழர்கள்.

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் நியமிக்கப்பட்டுள்ள 325 உதவி பொறியாளர்களில் 38 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.


இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதியிலும் தகுதியிருப்பின் அரசு வேலைக்கு மனு செய்யலாம் என்பதால், வேலைகுச் செர்ந்திருக்கிறார்கள்..

ஆனால் அனைத்து மாநில அரசு அல்லது அரசுத்துறை வேலைக்கும் அந்தந்த மாநில மொழியறிவு அவசியம் என்ற தகுதி பொதுவான தகுதியாக குறிப்பிடப்பட்டிருக்கும்.  ஆனால் தமிழ்நாடு மின் வாரிய விதிகளில் வேலைக்கு சேர்ந்து இரு வருடங்களில் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதிவிலக்கு இருக்கிறது.

இரண்டாண்டுக்கு தமிழ் தெரியாமல் இங்கே பணியாற்ற முடியுமா என்ன? அப்படியே இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துவிட்டால் வேறு என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது என்று தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் போராட முடியலையேப்பா...