ப.சிதம்பரத்துக்கு ஜெயிலில் சப்பாத்தியும் பருப்பும் தான்! நீதிபதி திட்டவட்டம்!

காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்லவேண்டும். சிதம்பரம், சிவகுமார் ஆகியோர் ஜெயிலுக்கும் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் யாரை எல்லாம் உள்ளே அனுப்பலாம் தீவிர யோசனையில் இருக்கிறது பா.ஜ.க. மேலிடம்.


சிதம்பரத்தை இரண்டு மாதங்களாவது திகார் சிறையில் அடைத்து வைக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் ஆசை என்று வெளியே சொல்லப்படுவது உண்மை என்பது போன்றுதான், இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழக்கு சப்பென்று முடிந்துபோனது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் ஜாமீன் மனு மீதான விசாரணையை 23ம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டது.

ஏற்கெனவே வீட்டுக் காவல் கேட்டு, அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், இன்று வீட்டு சாப்பாடாவது கிடைக்குமா என்று பரிதாபமாகக் கேட்டார். ஏராளமான நோய் இருப்பதால் வீட்டு சாப்பாடு அவசியம் என்று சொன்னார். ஆனால், சிதம்பரத்தின் இந்தக் கோரிக்கையையும் டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திகார் சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதைத்தான்ன் சிதம்பரத்திற்கும் வழங்கவேண்டும் என்று கூறிவிட்டது. என்ன கொடுமை சார் இது. கோடி கோடியா வைச்சிருக்கும் சிதம்பத்துக்கு நல்ல சாப்பாடு கிடைக்க மாட்டேங்குது.