ஃபரூக் அப்துல்லாவுக்கு விடுதலை இல்லை! வைகோ மனுவை நீதிமன்றம் தள்ளுபடி!

தன்னுடைய உயிர் நண்பர் ஃபரூக் அப்துல்லாவை நிகழ்ச்சிக்கு அழைக்கவேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் வைகோ. ஆனால், அந்த நிகழ்ச்சி முடியும் வரை அந்த மனுவே விசாரணைக்கு வரவில்லை.


விழா நடந்து முடிந்துவிட்டதால், ஃபரூக் அப்துல்லா குறித்து பேசுவதற்கு வைகோவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று போலீஸ் கூறியது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவு பப்ளிக் சேஃப்டி சட்டப்படி இந்த உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளதால், ஃபரூக் அப்துல்லா குறித்து முறையிட்டு தீர்வு காணலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

45 நாட்களைக் கடந்த பிறகும் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் எப்போது இயல்புநிலை திரும்பும், எப்போது அனைத்து தலைவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.