நித்தியானந்தாவால் மகள்கள் கடத்தப்பட்டதாக ஜனார்தன சர்மா என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், தந்தையால்தான் ஆபத்து இருப்பதாக 2 மகள்களும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தற்போது எங்கு இருக்கிறோம்..? தீவிரமாக தேடப்படும் நித்தி பெண் சீடர்கள் சற்று முன் வெளியிட்ட தகவல்..!

குஜராத்தை சேர்ந்த ஜனார்த்தன சர்மா, நித்தியானந்தா தனது 3 மகள்களை பெங்களூருவில் உள்ள நித்யானந்தா கல்வி நிலையத்தில் சேர்த்திருந்ததாகவும், அவர்கள் அகமதாபாத்திற்கு கடத்தப்பட்டு சித்ரவதை செய்ப்படுபவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசார் ஜனார்த்தன சர்மாவின் 3வது மகளை மீட்டனர். ஆனால் மற்ற 2 மகள்களை மீட்க முடியவில்லை. இந்நிலையில் நித்யானந்தா மீது குழந்தை கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தன சர்மா நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இதில் எங்கள் குழந்தைகளை போல் பல குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று நித்யானந்தாவின் புகழ் பாட வைப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனவே மகள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜனார்தன சர்மா தொடர்ந்த வழக்கு விசாரணை குஜராத் நீதிமன்றத்தில் வந்தது.
இதில் வீடியோ மூலம் ஆஜரான ஜனார்தன சர்மாவின் மகள்கள் தந்தை மீதே புகார் அளித்துள்ளனர். அவர்கள் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டில் இருப்பதாகவும், இந்தியா வர விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் தந்தை ஜனார்தன சர்மா மூலம் தங்களது உயிக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்தனர்.
இதை பார்த்த நீதிபதிகிள் இந்த வாக்குமூலத்தில் தற்போது இருக்கும் நாட்டின் தூதரகத்தில் ஜனவரி 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும என கூறி உள்ளனர். கடந்த 5ம் தேதி விசாரணையின்போது அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து வாக்குமூலம் தந்தது குறிப்பிடத்தக்கது.