என் நாட்டில் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி..! ஜநா கடிதத்தால் அம்பலமான அவனா நீ..? நித்தி!

நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை கேலியாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர், ஐ.நா.வுக்கு எழுதிய கடிதம் அவர் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு மோசமானவர் என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இந்திய நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்து ஐ.நா. மன்றத்திற்கு நித்தியானந்தா கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. தான் தனித் தன்மை கொண்ட தனிப்பெரும் தலைவர் என்று எழுதியுள்ளார். மேலும் பாலியல் குற்றங்களுக்காக தனக்கு கடுமையான அச்சுறுத்தல்களை கொடுத்ததால் தனி நாடு அமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். 

377 என்ற இந்திய சட்ட பிரிவு இருப்பதால் தான் பாலியல் தொடர்பான குற்றங்கள் அரங்கேறுகிறது என்று தெரிவித்துள்ள நித்தியானந்தா, 377 வது பிரிவை நீதிமன்றமே நீக்கிய பின்னரும் காவல்துறையினர் நினைத்தால் இந்த சட்டங்களை பயன்படுத்தி யாரையும் கைது செய்வது, பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

தனிநபர் ஒருவர் இயற்கைக்கு மாறான ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் கூட குற்றவாளி என்று கருதுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நித்தியானந்தா, தன்னுடைய கைலாச தேசத்தில் இயற்கைக்கு மாறாக சேர்ந்திருப்பது, ஆண், பெண் தன்பாலின சேர்க்கை உள்ளிட்ட 11 விதமான பாலியல் சம்பவங்களை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

தனது தேசம் ஓரின சேர்க்கை திருமணத்தை கொண்டாடும் என்று குறிப்பிட்டுள்ள நித்தி. ஆண்களை கட்டுப்படுத்துவதை விட இதுபோன்ற சலுகைகளை வழங்கினாலே துறவற பெண்களையும் ஒழுங்குபடுத்த இயலும் என்றும் கூறியுள்ளார் சுவாமி நித்தியானந்தா. 

அந்த கடிதத்தில் தான் ஆணும், இல்லை, பெண்ணும் இல்லை என குறிப்பிட்டுள்ளதால் அவனா நீ என்று சமூக வலைதளவாசிகள் கேலி செய்து வருகின்றனர்.