மத்திய அமைச்சரவையில் இடம் மறுப்பு! மாநில அமைச்சரவை விரிவாக்கம்! முதலமைச்சர் அதிரடி!

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார்.


பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பாஜக.,வும் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த 8 பேரை புதிய அமைச்சர்களாக நியமித்து, அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். அதேசமயம், கூட்டணி கட்சியான பாஜக.,வுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட நிதிஷ் தரவில்லை. இதுபற்றி பாஜக முன்வைத்த விருப்பத்தையும் அவர் நிராகரித்து விட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அசோக் சவுத்ரி, ஷியாம் ரஜக், எல்.பிரசாத், பீமா பாரதி, ராம் சேவக் சிங், சஞ்சய்  ஜா மற்றும் நீரஜ் குமார் உள்ளிட்டோரை புதிய அமைச்சர்களாக, நிதிஷ் குமார் முன்மொழிய, அவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை என்றுகூட இல்லாமல், அமைச்சர்களின் பதவியேற்பு உடனடியாக நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி, நிதிஷ் குமார் கூறுகையில், பாஜக.,வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நிர்வாகப் பணிகளின் அடிப்படையில், இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்றார். எனினும், நிதிஷின் செயல் பீகார் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.