அம்பானி மனைவியின் இந்த ஹேன்ட் பேக் ரூ.2.60 கோடியாம்! வாய் பிளக்க வைக்கும் விலை ஏன் தெரியுமா?

லண்டன்: உலகிலேயே விலை உயர்ந்த கைப்பையை நிடா அம்பானி கையில் வைத்தபடி போஸ் கொடுக்கும் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.


முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி, லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவருடன், கரீனா கபூர், கரிஸ்மா கபூர் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கரிஸ்மா கபூர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் என்ன விசேஷம் எனக் கேட்கிறீர்களா, ஆம், ஒரு விசயம் இருக்கிறது. இப்படத்தில் நிடா அம்பானி கையில் வைத்திருக்கும் ஹேண்ட் பேக் விலை ரூ.2.60 கோடி எனக் கூறப்படுகிறது.

இதுதான் உலகிலேயே விலை உயர்ந்த கைப்பையாகும். பிர்கின் பேக் என்ற பெயரில் ஹெர்ம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஹேண்ட் பேக், ஹிமாலயா முதலை தோலில் உருவாக்கப்பட்டதாகும். முழுக்க முழுக்க திபெத்திய பகுதி கைவினைஞர்களின் உதவியுடன் இந்த பை தயாரிக்கப்படுகிறதாம்.

ஹெர்ம்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும், இத்தகைய ஹேண்ட்பேக் வெறும் 2 மட்டுமே தயாரிக்கும் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விசயமாகும்.   உலகிலேயே, நிடா அம்பானி, கிம் கார்டாஷியன், கைலி ஜென்னர் போன்ற வெகுசில நபர்கள் மட்டுமே இந்த பிர்கின் கைப் பைகளை வைத்திருக்கிறார்களாம்.

முதன் முதலில் இத்தகைய கைப்பை, ஜேன் பிர்கின் என்ற நடிகைக்காக, 1985ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அதன்பின், பிர்கின் என்ற பெயரிலேயே ஆண்டுதோறும் 2 கைப்பைகளை மட்டும்  ஹெர்ம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.