நிர்பயா குற்றவாளிகளுக்கு சூரியன் உதிக்கும் முன்பே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது ஏன்? பரபர காரணம்!

டெல்லி: மரண தண்டனைக் கைதிகள் ஏன் சூரிய உதயத்திற்கு முன்பே தூக்கிலிடப்படுகிறார்கள் என்ற உண்மை வெளியாகியுள்ளது.


டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு, மரண தண்டனை வரும் ஜனவரி 22ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தூக்குத் தண்டனை கைதிகள், பொதுவாக ஏன் சூரிய உதயத்திற்கு முன்பே தூக்கிலிடப்படுகிறார்கள் என்பது பற்றிய சில உண்மை விவரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம் 

பின்வருமாறு:  

அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதன் மூலமாக, அன்றாட சிறை அலுவல்கள் பாதிக்கப்படாது. காலையில் தூக்கிட்டு முடித்துவிட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து, இறந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் அன்றைக்குள்ளாக ஒப்படைக்க முடியும். அவர்களும் உரிய இறுதிச்சடங்குகளை   செய்துவிடுவார்கள். 

காலையில் தூக்க கலக்கத்திலேயே தூக்கிடுவதால் சம்பந்தப்பட்ட நபருக்கும் இதுபற்றி அதிக புரிதல் இருக்காது. பகல் பொழுதில் இதனைச் செய்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு, மனநலக் கோளாறு ஏற்பட்டுவிடும். இதுதவிர, காலை நேரத்தில் பொதுமக்கள் உறங்கியபடி இருப்பார்கள். யாரும் அந்நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடியாது.