ஆளுக்கு 5 கிலோ அரிசி , இலவச சிலிண்டர்..! நிர்மலா சீதாராமன் திடீர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, முதற்கட்ட நிவாரண நிதியாக 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


மேலும் சுமார் 80 கோடி பேருக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் அரிசி வழங்கப்படும் எனவும், பிரதம மந்திரி விவசாய உதவித் தொகையின் முதல் தவணை ரூ 2000 வரும் ஏப்ரல் மாதத்தில் வழங்க உள்ளதாகவும் இதன் காரணமாக சுமார் 8.69 கோடி விவசாயிகள் பயணடைவார்கள் என்று தெரிவித்தார். 

வயதானவர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை அடுத்த 3 மாதத்திற்கான தொகையை இரண்டு தவனையாக வழங்கப்படும் என்றும்.

பிரதமர் மந்திரி உஜ்வாலா திட்டத்தின்படி அடுத்த மூன்று மாதத்திற்கு 8.33 கோடி எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதாகவும்.

தீன் தயாள் தேசிய வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே இருந்த சுய உதவிக் குழுக்களின் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து ரூ .20 லட்சம் வரை உயர்த்த படுவதாகவும். இதன் மூலமாக சுமார் 63 லட்சம் சுய உதவிக்குழுக்கள் பயணடைவர் என்று தெரிவித்தார்

மேலும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீதாராமன். வருமான வரி தாக்கலுகான கால வரம்பை நீட்டிப்பு செய்தது. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க தேவையில்லை போன்ற சில சலுகைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சம் வரையிலான மருத்துவ மற்றும் இறப்பு காப்பீடு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த ஒரு வாரமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் சமூக விலகலை அனுசரித்து வரும் இந்த சூழலில். நாட்டில் கடுமையான அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.

மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் தங்கு தடை இன்றி வினியோகிக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும். சில இடங்களில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை போன்ற காரணங்களால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்ற இந்த சூழலில்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்கு மேற்கண்ட தகவலை கூறியுள்ளார்.