நிதி அமைச்சர் பதவிக்கு கல்தா! தமிழக பா.ஜ.க. தலைவராகிறார் நிர்மலா சீதாராமன்? கிடுகிடு திருப்பம்!

தமிழ்நாடு பிஜேபி தலைவராக 2014 முதலே பதவி வகித்து வருகிறார் தமிழிசை.


ஆகவே இந்த முறை நடைபெற இருக்கும் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் ஆனால் தனக்கு உறுதுணையாக இருக்கும் ஹொசூர் நரேந்திரனை முன் நிறுத்துவார் என்று சொல்லப்படுகிறது. இந்த முறை பிஜேபி தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.சி.பி ராதாகிருஷ்ணன்,வானதி சீனிவாசன்,ஹெச்.ராஜா.பேராசிரியர் கனகசபை, ஹெச்.ராஜா,பொன்னார் ,நைனார் நாகேந்திரன் இவர்களுடன் எஸ்.வி.சேகரும்கூட இருக்கிறார்

பிஜேபி மாநிலத் தலைவர் பதவிக்கு வருபவருக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி வேண்டும் என்பதால் எஸ்வி.சேகருக்கும் நைனார் நாகேந்திரனுக்கும் வாய்ப்பில்லை.ஹெச்.ராஜாவை தமிழக பிஜேபி தலைவராக்கினால் இன்னும் உங்கள் மேல் வெறுப்புதான் வளறும் என்று உளவுத்துறை திட்டவட்டமாக கூறிவிட்டதாம்.இப்போதைக்கு முதல் ரவுண்டில் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் மட்டும்தான் இருக்கிறார்கள்.

ஆனால் , பிஜேபி இண்டலக்சுவல் விங்கில் இருக்கும் மதுரை பேராசிரியர் கனகசபையை சர்ப்ரைஸாக கொண்டுவந்து பிஜேபிக்கு முற்றிலும் புதிய இமேஜை உருவாக்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறதாம்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை மிரட்டி,மேயர் முதல் , பஞ்சாயத்து கவுன்சிலர் வரை மூன்றில் ஒருபங்கு சீட்டுகளை பெற்றுவிடும் தீர்மானத்தில் இருக்கிறது பிஜேபி.என்னதான் சுதந்திர தினவிழாவில் ' இந்தியை தமிழ் நாட்டுக்குள் நுழைய விடமாட்டோம்' என்று எடப்பாடி முழங்கினாலும்,பெரும்பாலான அதிமுக பெருந்தலைகளின் குடுமி அமித்ஷா கையில் இருப்பதால் கணிசமாக சீட்டுகளை பிஜேபி பெறக்கூடும்

ஆகவே அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பிஜேபி மிகவும் கவனமாகச் செயல்படும். ஒரு வேளை,இவர்கள் எல்லோரையும் விட்டு விட்டு நிர்மலா சீத்தாராமனை தமிழ்நாடு பிஜேபி தலைவராக அமர்த்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!.