ஏர் இந்தியா! பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு! மார்ச் மாதத்திற்குள் விற்றுவிடுவோம்! நிர்மலா சீதாராமன் அதிரடி!

டெல்லி: ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை தனியாருக்கு விற்க உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது.  இதன்பேரில் இவ்விரு நிறுவனங்களையும் தனியாருககு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்பேரில் மார்ச் மாதம் இவ்விரு நிறுவனங்களும் விற்கப்படும் என, தற்போது நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதன்மூலமாக, நடப்பு நிதியாண்டிற்குள் ரூ.1 லட்சம் கோடி வருமானம் மத்திய அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி 2 நிறுவனங்களும் விற்கப்படுவதன் மூலமாக, அடுத்தடுத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தப்படும் எனக் கூறி , எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்காமல், அவற்றை ஒரேயடியாக தனியாருக்கு தாரைவார்ப்பது ஏற்புடையதல்ல, இத்தகைய நடவடிக்கை எடுப்பது எதிர்காலத்தில் நாட்டின் வங்கித் துறையிலும் எதிரொலிக்கும் என விமர்சிக்கப்படுகிறது.