என்னை டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள் ப்ளீஸ்! கதறும் நிம்மி! அதிர வைக்கும் காரணம்! வைரல் ஆடியோ!

மதுரை: என்னை யாராவது மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள், என்று கூறி நிர்மலா தேவி கதறி அழும் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாகக் கூறி, அங்கு பேராசிரியை பணியில் இருந்த நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த முருகன், கருப்பசாமி என்பவர்களும் கைது செய்யப்பட்டனர். நிர்மலா தேவிக்கு, தமிழக அரசின் உயர் மட்டம் வரை தொடர்பிருப்பதாக, பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.  

இந்நிலையில், சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், வழக்கு விசாரணைக்காக, அடிக்கடி, அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது. இதன்போது, விசாரணைக்கு ஆஜராகும் நிர்மலா தேவி, விசித்திரமான முறையில் நடந்துகொள்ள தொடங்கியுள்ளார். தியானம் செய்வது போல புலம்புவது, தர்காவில் அமர்ந்துகொண்டு கதறி அழுவது என அவரது நடத்தை பல தரப்பிலும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே, நிர்மலா தேவி யாரோ ஒருவரிடம் பேசுவது போன்ற ஆடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ''சார், நேற்று நான் கோபமாக பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். கொஞ்ச நாளாகவே நான் சரியாக இல்லை. ஆன்மீக ரீதியாக இப்படி பிரச்சனை வருகிறதா என்று தெரியவில்லை. ரொம்ப கஷ்டமாக உள்ளது. தினமும் வித விதமாக நான் நடந்துகொள்கிறேன். மதுரையில் யாராவது உங்களுக்கு தெரிந்த மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். தினமும் பெரிய பிரச்சனை வருகிறது. என்னால் தாங்க முடியவில்லை,'' எனக் கதறுகிறார். 

இதற்குப் பதில் அளித்து பேசும் நபர், ''உங்களை திருநெல்வேலி அருகில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால், நீங்கள் நடந்துகொண்ட விதத்தால், அதனை கைவிட நேரிட்டது. இப்போது மீண்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன்,'' எனச் சொல்கிறார். 

இதற்குப் பதில் அளிக்கும் நிர்மலா தேவி, உடனே என்னை மதுரை அல்லது திருநெல்வேலி அழைத்துச் சென்று காப்பாற்றுங்கள், எனக் கெஞ்சுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகிறது.