என் மகள்களாகத்தான் பார்த்தேன்..! மயங்கி விழுவதற்கு முன் நிர்மலா தேவி கூறிய ஒற்றை வார்த்தை! என்ன? ஏன் தெரியுமா?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு விசாரணையில் நேற்று நீதிமன்றத்தில் அஜராக வந்த நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


வழக்கம்போல் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தநிர்மலா தேவி நீதிபதி முன் ஆஜரானபோது திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைக்கப் பார்த்த்னர். கையை உரசி சூடு எற்படுத்திப் பார்த்தனர்.

நெஞ்சை தடவிக் கொடுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் நிர்மலா தேவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நீண்ட நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பினார் நிர்மலா தேவி. 

நேற்று நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். நீதிபதி அவர்களிடம் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது, அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த கூட்டு சதி செய்தது உட்பட 8 பிரிவுகளின் கீழ் உள்ள குற்றச்சாட்டு உண்மையா என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த 3 பேரும் மாணவிகளை மகளாகத்தான் பார்த்ததாகவும் வேறு எந்த தவறு செய்யவில்லை என்றும், தங்கள் மீதான குற்றச்சாட்டு பொய் எனவும் தெரிவித்தனர். நிர்மலா தேவி கூறுகையில், நான் மாணவிகளை குழந்தையாகத்தான் பார்த்தேன். எந்த தவறும் செய்யவில்லை என நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து 3 பேரும் வரும் 23 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.