நான் நிர்பயாவை கற்பழித்தேன்..! தனிமைச் சிறையில் அடைத்து என்னையும் கற்பழித்தார்கள்..! உச்சநீதிமன்றத்தில் கதறிய முகேஷ்!

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனுக்கு சிறையில் பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் அளித்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவன் முகேஷ்சிங் தனது தண்டனையை குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளான்.

அவன் சார்பாக அவரது வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் வாதாடினார். அதில் சிறையில் முகேஷ்சிங் தான் சிறையில் பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தார் மேலும் தன்னை தனிமை சிறையில் அடைத்து வைத்ததாகவும் தெரிவித்தார். அதே சமயம் மற்றொரு குற்றவாளி ராம்சிங் சிறையிலேயே கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்து கொல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் மரண பயம் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக நிம்மதியாக தூங்கமுடியவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார் மனுவை நீதிபதி ஆர் பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதற்கிடையே எதிர்தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜெனரல் துஷார்மேத்தா, குற்றவாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது,

மற்றும் சிறையில் மோசமாக நடத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள், கருணை காட்ட போதுமானது அல்ல என்று தெரிவித்தார். "தவறாக நடத்தப்பட்டது உண்மை என்றாலும் அதை வைத்து தண்டனை குறைக்க முடியாது, அதற்காக கருணை வழங்கப்பட வேண்டும் என ஒருவர் கேட்பது சரியல்ல என வாதிட்டார்.