நள்ளிரவு 11 டூ 1 மணி..! கூட்டம் கூட்டமாக வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்த இளம் பெண்கள்..! நெகிழ வைக்கும் காரணம்!

திருவனந்தபுரம்: நிர்பயா இறந்ததன் 7வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, கேரள பெண்கள் நள்ளிரவில் பேரணி சென்றனர்.


டெல்லியில் நள்ளிரவில் ஆண் நண்பருடன் பேருந்தில் பயணித்த நிர்பயா என்ற மாணவியை அந்த பேருந்து டிரைவர் உள்பட பலரும் வன்புணர்வு செய்து, கொடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், 13 நாட்கள் சிகிச்சைக்காகப் போராடிய நிலையில், 2012 டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்தார். நிர்பயாவின் மரணத்திற்கு நீதி கேட்டு டெல்லி உள்பட இந்தியா முழுக்க பல இடங்களில் கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.  

இந்நிலையில், நிர்பயா இறந்ததன் 7வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், கேரள மாநில மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டுத் துறை சார்பாக, நள்ளிரவில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, கேரளா முழுக்க, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கி, திங்கள்கிழமை அதிகாலை 2 மணி வரை பெண்கள் வீதிகளில் பேரணியாகச் சென்றனர்.

குறிப்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள மணவீயம் வீதியில் நடைபெற்ற நள்ளிரவுப் பேரணியில், ஐஏஎஸ் அதிகாரி திவ்யா எஸ் ஐயர், டப்பிங் ஆர்டிஸ்ட் பாக்யலட்சுமி, கேரள மாநில மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டுத் துறை இயக்குனர் அனுபமா, சினிமா இயக்குனர் விது வின்சென்ட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த புகைப்படத்தை கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, பாராட்டியுள்ளார்.