தேர்தல் தோல்விக்குப் பிறகு பல்வேறு அ.ம.மு.க. தலைகள் கட்சி மாறினாலும் தங்கதமிழ்செல்வன் மட்டும் அமைதியாக இருந்தார்.
அதிமுகவில் முக்கிய பதவி! முடிந்தது டீல்! தினகரனுக்கு டாடா சொல்கிறார் தங்கம்!
தி.மு.க.விற்கு போனால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை. ஏனென்றால் அ.தி.மு.க.விற்கு போனால் பன்னீருக்கு அடிமையாகத்தான் தேனியில் இருக்க முடியும். இந்த நிலை காரணமாகவே தங்கம் அ.தி.மு.க.விற்கு செல்வது தடுமாறிக்கொண்டே இருந்தது.
தி.மு.க.விற்கு போகவும் விரும்பாமல் இருந்தார். இந்த நிலையில் சுமூகமாகப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாம். எடப்பாடிக்கு வேண்டப்பட்ட அமைச்சர் மூலம் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாம்.
அதன்படி அ.தி.மு.க.விற்கு தங்கம் சட்டசபைக் கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே சேர்ந்துவிடுவார். அவருக்கு மாநிலப் பொறுப்பு ஒன்று கொடுக்கப்படுகிறது.
தேனியில் அரசியல் செய்யாமல் மாநில அளவுக்கு செயல்படலாம் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு பன்னீரும் ஒப்புக்கொண்டாராம். அதனால், எந்த நேரமும் தங்கம் பற்றிய தகவல் ஓடிவரும் என்கிறார்கள்.