அடுத்து அமைச்சர்கள் மழைக்காக தீ மிதிக்கப் போகிறார்களாம்! கமான் மினிஸ்டர்ஸ்!

தண்ணீர், ரோடு, மின்சாரம் போன்றவை தடையின்றி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாம் அரசுகளை தேர்வு செய்கிறோம்.


ஆனால், அவர்களோ யாகம் நடத்துவதன் மூலமாக மழையை கொண்டு வந்துவிட முடியும் என்று நம் தமிழக அமைச்சர்கள் நம்புகிறார்கள். அதற்காக லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி யாகம் நடத்தியிருக்கிறார்கள்.

நம் மரத்தை வெட்டியது அரசியல்வாதிகள். நீர்வழிப் பாதையை அடைத்தது அரசியல்வாதிகள். குளத்தை மேடாக்கி வீடு கட்டியது அரசியல்வாதிகள். ஆனால், இப்போது லட்ச, லட்சமாக செலவழித்து, நெய், பால், பன்னீர், தேன், .அரிசி, பருப்பு  என எல்லாவற்றையும் தீயில் போட்டு, ஆளாளுக்கு ஐயர்களின் மாலை மரியாதைகளை பெற்றுக் கொண்டு, இனிமேல் மழை வரும் என்று நம்புகிறார்கள்.

இதைவிட ஒவ்வொரு தொண்டனும் ஒரு மரம் நட வேண்டும், அதை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தால், இன்னும் இரண்டு வருடங்களிலாவது தீர்வு கிடைத்திருக்கும். அதைவிட்டு இருக்கும் மரத்தையும் வெட்டி தீயில் போட்டால் மழை எப்படி வரும்?

யாகம் நடத்தியதால் மழை வரவில்லை. அதனால் அமைச்சர்கள் மனம் தளர வேண்டியதில்லை. ஆம், தீ மிதித்தால் நிச்சயம் மழை வருமாம். மக்களுக்காக இதுவரை அமைச்சர்கள் எதுவும் செய்யவில்லை, இதை மட்டுமாவது செய்யட்டும். எப்போ வருவார் எடப்பாடி என்று காத்திருக்கிறது தீக்குண்டம். இறங்குவதற்கு அவரும் அமைச்சரும் ரெடியா?