ஐஸ்வர்யா, பிரியங்கா சோப்ரா வரிசையில் அடுத்த அழகியும் நடிக்க வந்தாச்சு! அக்‌ஷய்குமார் ஜோடியாக மனுஷி சில்லார்!

ஐஸ்வர்யாராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய படங்களிலும், பிரியங்கா சோப்ரா தமிழன் படத்திலும் நடித்துள்ளனர்.


யுக்தாமுகி பூவெல்லாம் உன்வாசம் படத்தில் நடித்துள்ளார். சுஷ்மிதாசென் ரட்சகன் படத்தில் நடித்து இருக்கிறார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். லாராதத்தா அரசாட்சி, டேவிட் படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளனர்.உலக அழகி பட்டம் வென்ற இந்திய பெண்களான ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா, லாராதத்தா, சுஷ்மிதா சென், யுக்தா முகி ஆகியோர் நடிகைகளாக மாறினர்.

இந்த வரிசையில் 2017-ல் இந்தியா சார்பில் பங்கேற்று உலக அழகியாக தேர்வான மனுஷி சில்லாரும் நடிகையாகி உள்ளார். அரியானாவை சேர்ந்த இவர் இந்தியில் தயாராகும் பிருதிவிராஜ் என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் அக்‌ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார்.12-ம் நூற்றாண்டில் இந்தியாவில் வடமேற்கு பகுதியை ஆண்ட மன்னர் பிருதிவிராஜ் சவுகான் வாழ்க்கை வரலாறு படமாக இது தயாராகிறது. பிருதிவிராஜ் சவுகான் வேடத்தில் அக்‌ஷய் குமாரும், சன்யோகிதா வேடத்தில் மனுஷி சில்லாரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அடுத்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள்.