சீமானுக்கு எதிராக அடுத்த ஆடியோ வந்தாச்சு! கெட்ட வார்த்தைகள் கம்மிதான்! ஆனா, வில்லங்கம் அதிகம்!

சீமானின் உதவியாளரும் தனசேகரும் பேசிய ஆடியோவைக் கேட்டு தமிழகமே ஆடிப்போய் இருக்கிறது. தமிழில் இத்தனை கெட்ட வார்த்தைகள் இருக்கிறதா என்று பலரும் டிக்‌ஷனரி போடுவதற்கு ஆசைப்படும் நிலையில், அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.


அது, தனசேகரும் அவரது நண்பரும் பேசுகிறார்கள். சீமானை மிகச்சிறப்பாக தோலுரித்துவிட்டீர்கள், நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தனசேகரிடம் பேசுகிறார். அதற்கு தனசேகர், சீமானின் பல்வேறு விவகாரங்களை நோண்டி நொங்கெடுக்கிறார். சீமான் கூட்டத்தில் இருந்தவர்தானாம் தனசேகர். முதல் கட்டமாக இருவரும் சேர்ந்து பணியாற்றியபோதே சீமானுடன் சண்டை போட்டு வெளியேறி இருக்கிறார். 

இந்த கேசட்டில் சீமானை நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளால் திட்டும் தனசேகர், இளங்கோ மல்லன் என்பவரது மரணத்தை கேள்வி எழுப்புகிறார். தன்னை சீமான் கூட்டத்தினரால் நெருங்கவே முடியாது என்று சொல்லும் தனசேகர், தைரியமிருந்தால் இந்த எண்ணுக்கு சீமானை பேசச்சொல்லு பார்க்கலாம் என்று சொல்கிறார். அதைவிட அதிர்ச்சிகரமாக, விரைவில் அடுத்த ஆடியோ வெளிவர இருக்கிறது என்றும், அதில் இன்னும் பல்வேறு உவ்வே ரக வார்த்தைகள் இடம் பெறும் என்றும் தெரிவித்திருக்கிறார். 

இந்த ஆடியோ விவகாரம் குறித்தும், திருநங்கைகள் சீமானுக்கு எதிராகப் போராடுவது குறித்தும் பலரும் கேள்வி மீதுகேள்வி எழுப்பும் வரும் நிலையில், இந்த ஆடியோ குறித்து இதுவரை சீமான் விளக்கம் கொடுக்கவில்லை. அப்படி சீமான் ஏதாவது கொடுத்தால், மேலும் பல்வேறு ஆடியோக்கள் வெளிவருமாம். எப்படியோ, தேர்தல் பரபரப்பு குறைந்துவிட்ட நிலையில், சீமானின் ஆடியோக்கள்தான் பரபரப்பை உருவாக்கி வருகின்றன்.