நாங்கள் இருவரல்ல, மூவர்..! நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சுவாரஸ்ய ட்வீட்

நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் எமி சாட்டர்வைட் தனது ட்விட்டர் பக்கத்தில்" நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் ஜனவரியில் முதல் குழந்தையை பெற்றெடுக்க போகிறோம் "என பதிவிட்டுள்ளார்.


நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனும் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இருவரும் 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சக வீராங்கனை தற்போது கர்ப்பமாக இருப்பதாக நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் எமி சாட்டர்வைட் 32, இவருக்கும் அதே அணியில் வேகப்பந்து வீச்சாளராக உள்ள லீ தகுகு 28 இருவரும் ஒரே அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அதிகப்படியான நெருக்கம் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக முடிவெடுத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் பின்னர் 2017 ஆம் ஆண்டு முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் 2013 ஆம் ஆண்டில் இருந்தே ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து எமி சாட்டர்வைட் தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் ஜனவரியில் நாங்கள் எங்களது முதல் குழந்தையை பெற்றுரெடுக்க போகிறோம் "எனவும் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். இதற்கு லீ தகுகு இனிமேல் "நாங்கள் இருவர் இல்லை மூன்று பேர் "என பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார்.

பல்வேறு கிரிக்கெட் பிரியர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் இவர்களின் டுவிட்டர் பதிவிற்கு தங்களது பாராட்டுகள் மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.