நியூசிலாந்தில் காதலனை கட்டாயபடுத்தி திருமணம் செய்து கொண்டதில் அடுத்த நாளே கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு போராடிய காதலனுக்கு ஒரு நாள் மனைவியான காதலி! பிறகு நேர்ந்த பரிதாபம்! நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்!

குயின்ஸ் லாந்து பகுதியில் கால்பந்து விளையாட்டு வீரரான நாவர் ஹெர்பட் கடந்த சில மாதங்களாக மூளையில் கட்டி உருவாகி மரணத்துடன் போராடி வருகிறார். இந்த நிலையில் அவரை உயிருக்கும் மேலாக காதலித்த மய்யா அவரை கட்டாயப்படுத்தி கடந்த வாரம் திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்தின் போது ஆனந்த களிப்பில் இருந்தவர் அடுத்த நாளே இறந்த சம்பவம் மய்யாவை அதீகமாக உடைந்து போக செய்துள்ளது. மேலும் அவரது நினைவுகள் உடன் தன் வாழ் நாட்களை கடத்தி விடுவேன் என குரல்கள் நடுங்க அவர் பேசும் போது அனைவரது உள்ளமும் உருகிவிடுகிறது.
இதனிடையே தனது காதலன் உயிரிழந்துவிடுவார் என்று தனக்கு தெரியும் என்றும் இருந்தாலும் தான் அவருடைய மனைவியாக ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் மய்யா கூறியுள்ளார். ஒரே ஒரு நாள் தாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தது ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தது போல் இருந்ததாகவும் மய்யா கூறியுள்ளார்.
மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் காதலன் அவதிப்படுவதை பார்க்க முடியாமல் தவித்ததாகவும் இதனால் கடைசியாக அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அவசரமாக அதே சமயம் ஆனந்தமாக திருமணம் செய்ததாகவும் மய்யா தெரிவித்துள்ளார்.