டி20ஐ தூக்கி சாப்பிட்ட பரபர டெஸ்ட் மேட்ச்! 4 ரன்களில் நியுசியிடம் வீழ்ந்த பாக்.,

இருபது ஓவர்கிரிக்கெட் போட்டிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இறுதி வரை பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது நியுசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.


பாகிஸ்தான் – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ்சில் நியுசிலாந்து அணி 153 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் அணியும் கூட தட்டுத் தடுமாறித்தான் முதல் இன்னிங்சில் 227 ரன்கள் குவிக்க முடிந்தது. பின்னர் 2வது இன்னிங்சை விளையாடிய நியுசிலாந்து அணி முதல் இன்னிங்சை போலவே ரன்களை குவிக்க தடுமாறியது.


   74 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நேர்த்தியான பந்து வீச்சை சற்று பொறுமையாக நியுசிலாந்து வீரர்கள் எதிர்கொண்டனர். இதனால் நியுசிலாந்து அணி 2வது இன்னிங்சில் மிகவும் சிரமப்பட்டு 249 ரன்கள் மட்டுமே எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி 2 நாட்கள் ஆட்டம் பாக்கி என்பதால் பாகிஸ்தான் நியுசிலாந்தை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  3வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் எதையும் இழக்காமல் 37 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 4வது நாளில் ஆட்டம் முடிந்துவிடும், பாகிஸ்தான் வென்று விடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 4வது நாள் ஆட்டம் துவங்கியது முதலே நியுசிலாந்து பந்து வீச்சாளர்களின் கைகள் ஓங்கியிருந்தது. அடுத்தடுத்து பாகிஸ்தான் விக்கெட்டுகளை சாய்த்து அதிர்ச்சி கொடுத்தனர்.

  40 ரன்களுக்கு விக்கெட் எதுவும் எடுக்காமல் விளையாடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் 171 ரன்கள் எடுத்திருந்த போது 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரே ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியுசிலாந்து, 4 ரன்களை கடந்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் என டெஸ்ட் போட்டி டி20 போட்டி போல் விறுவிறுப்பானது.விக்கெட்டை சாய்த்துவிட வேண்டும் என்று நியுசிலாந்து கேப்டன் பீல்டிங்கை டைட்டாக்கினார்.   பதற்றத்தி களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் அசார் அலி ஆட்டம் இழக்க நியுசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் சிறிது நிதானமாக இருந்திருந்தால் பாகிஸ்தான் வென்று இருக்க முடியும். ஆனால் நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் வியூகம் ஒரு விறுவிறுப்பான டெஸ்ட் போட்டியை ரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளது. ஆட்ட நாயகனாக நியுசிலாந்து வீரர் அஜாஜ் பட்டேல் அறிவிக்கப்பட்டார்.