இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான அணியை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக களம் இறங்கும் நியூஸிலாந்து வீரர்கள் இவர்கள் தான்.
இந்திய
அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் தற்போது பங்குபெற்று வருகிறது.
இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி நியூஸிலாந்த்திற்க்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய அணி நியூஸிலாந்திற்கு எதிரான 5 ஒரு நாள் போட்டி
கொண்ட தொடரிலும் மற்றும் 3 T20 போட்டி கொண்ட தொடரிலும்
பங்கு பெறவுள்ளது.
இந்த
போட்டிகள் நியூலாண்டில் நடைபெறவுள்ளது. நியூஸிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான
முதல் மூன்று ஒரு நாள்
போட்டிக்கான அணியை தேர்வு செய்துள்ளது.
இந்த அணியில் மிட்செல் சாண்ட்னெர்
மற்றும் க்ராந்தோம் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
மற்றும் நியூஸிலாந்திற்கு இடையேயான முதல் ஒரு நாள்
போட்டி வரும் ஜனவரி 23ம்
தேதி நேபியரில் தொடங்கவுள்ளது. நியூஸிலாந்து அணி விவரம்:
கேன்
வில்லியம்சன், ட்ரெண்ட் பௌல்ட், பிரேஸ்வேல், க்ராந்தோம்
,பெர்குசன், மார்ட்டின் குப்தில், மாட் ஹென்றி ,டாம்
லதாம் ,கொலின் முன்ரோ ,ஹென்றி
நிக்கோலஸ், மிச்சேல் சாண்ட்னெர், சோதி, டிம் சௌதி,
ரோஸ் டெய்லர்.
நியூஸிலாந்து
அணியின் கேப்டன் கேன் வில்லம்சன்
மற்றும் இந்திய அணியின் கேப்டன்
விராட் கோஹ்லி ஆகிய இருவரும்
சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேன்களாக
உள்ளனர். இந்த தொடரில் யார்
சிறப்பாக ரன் குவிக்க போகிறார்கள்
என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.