நியூயார்க்: பாப் பாடகர் ஆரோன் கார்ட்டர், அவரது உடன்பிறந்த சகோதரி மற்றும் சகோதரர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மூத்த சகோதரியால் பலாத்காரம் செய்யப்பட்டேன்! பிரபல பாடகரின் அதிர வைக்கும் தகவல்!
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''எனது 10 வயது முதல் 13 வயது வரையிலும், எனது சகோதரி (லெஸ்லி) என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மனச் சிதைவு நோய்க்காக மருந்து எடுத்துக்கொண்டிருந்த அவர் சில நாட்கள் மருந்தை தவிர்த்துவிட்டு, என்னை பலாத்காரம் செய்வது வழக்கம்.
அவர் மட்டுமல்ல, எனது 8 வயதில் என்னை நடனக் கலைஞர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதவிர எனது சகோதரர் (நிக்) என்னை வாழ்நாள் முழுக்கவும் ஆசை தீர பலாத்காரம் செய்தார். இதுபற்றி நிக் வாய் திறந்து உண்மை பேச வேண்டும். தவறு செய்தவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்புகிறேன்,'' என்று எழுதியுள்ளார்.
கடந்த 1990களில் பாப் மற்றும் ஹிப் ஹாப் பாடகராக புகழ்பெற்ற ஆரோன் கார்ட்டர், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில்தான் குணமடைந்தார். அதேசமயம், அவர் குற்றம் சாட்டியுள்ள அவரது சகோதரி லெஸ்லி மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே மரணமடைந்துவிட்டார்.
இதற்கிடையே, ஆரோன் கருத்து பற்றி அவரது சகோதரர் நிக், மற்றொரு சகோதரி ஏஞ்செல் போலீஸ் புகார் அளித்துள்ளனர். நிக்கின் மனைவி கர்ப்பம் தரித்த நிலையில் அவரை கொலை செய்ய ஆரோன் முயற்சிப்பதாகவும், அவரிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அவர்கள் போலீசில் முறையிட்டுள்ளனர்.
பிரபலங்கள் என்றாலே பிராப்ளம்தான் என்பதற்கு மேற்கண்ட செய்தி நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.