மகனுடன் சேர்ந்து தாய் செய்த தகாத செயல்! வீடியோ எடுத்த மகள் கெஞ்சிய பரிதாபம்! ஆனாலும் நிகழ்ந்த விபரீதம்!

நியூயார்க்: அமெரிக்காவில் பெற்ற மகனை மது குடிக்க சொல்லி கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஒக்கலஹோமா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில், அவருக்கு  சில ஆண்டுகள் முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிறுவன் வளர்ந்து வரும் நிலையில், அவனை சில நாள் முன்பாக, மது குடிக்கும்படி அந்த தாய் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனை, அவரது மூத்த மகள் வீடியோவாக எடுத்து, Snapchat தளத்தில் பகிர்ந்துள்ளார்.   

அந்த வீடியோவில், சிறுவனை மது பாட்டில் எடுத்து வரும்படி தாய் சொல்கிறார். சிறுவன் தட்டு தடுமாறி பாட்டிலை எடுத்து வர, அதனை வாங்கியபடி, 'நீயும் குடிக்கறீயா?' என தாய் கேட்கிறார். பிறகு, பாட்டிலின் மூடியில் சிறிது மது ஊற்றி சிறுவனை குடிக்கும்படி தாய் சொல்கிறார். சிறுவன் குடிக்க, அதனை பரிகாசம் செய்தபடியே, அவனது சகோதரி வீடியோ பதிவு செய்கிறார்.

இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுவதை தொடர்ந்து, சிறுவனை மது அருந்த கட்டாயப்படுத்திய தாயை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குப் பதிந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், சிறுவனை வளர்க்கும் பொறுப்பு அவரது தாயிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே, ''இது ஒரு எதிர்பாராத சம்பவம், மது எதுவும் ஊற்றி தரவில்லை. வெறும் பாட்டில் மூடியைத்தான் எனது மகனுக்கு அளித்தேன். அவனை பார்க்காமல் என்னால் ஒரு நாள் கூட தனியாக இருக்க முடியாது. இந்த தண்டனையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை,'' என சிறுவனின் தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.