இனிமே இவர் நின்று கொண்டே ஒன் பாத்ரூம் போக முடியும்..! உலகின் முதல் ஆண் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை சக்சஸ்!

நியூயார்க்: ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட கடற்படை வீரர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்தவர் ரே (30 வயது). கடற்படை வீரரான இவர், ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்தபோது நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் சிக்கியதால், தனது 2 கால்கள், விதைப்பகுதி, ஆணுறுப்பு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளை உள்ளிட்ட பகுதிகளை இழந்துவிட்டார். எனினும், உயிர் மட்டும் எஞ்சியிருந்தது.

இந்நிலையில், இவருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு, வயிறு சம்பந்தமான அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. பிறகு, ஆணுறுப்பு மற்றும் அது சார்ந்த விதைப்பகுதி பொருத்துவதில் சிக்கல் நிலவியது. இதற்காக யாரேனும் உறுப்பு தானம் செய்வார்களா என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் காத்திருந்தனர்.

இறுதியாக, அவருக்கு ஆணுறுப்பு தானம் கிடைத்தது. இதன்பேரில், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒன்று சேர்ந்து 14 மணிநேரம் போராடி, ரேவுக்கு ஆணுறுப்பை வெற்றிகரமாக பொருத்தினர். இதையடுத்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த ரே, தற்போது உடல்நலம் பெற்றுள்ளார்.  

தற்போதைய நிலையில், அவரது ஆணுறுப்பு எழுச்சி பெற முடிகிறது என்பதோடு, அவரால் நின்ற நிலையில் சிறுநீர் கழிக்கவும் முடிகிறது. இது மனதிற்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது என்று, ரே குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 4வது நபர் ரே ஆவார். ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்கா தலையிட்ட பிறகு, சுமார் 500 அமெரிக்க வீரர்கள் வெடிவிபத்தில் சிக்கி இத்தகைய ஆணுறுப்பு பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களில் பலர் இன்னமும் மாற்று உறுப்பிற்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.