முன்னழகை DDD சைஸ் ஆக்க ஆப்பரேசன்..! பிரபல நடிகைக்கு பிறகு நேர்ந்த பரிதாபம்!

நியூயார்க்: செயற்கை மார்பகங்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக, நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிப்பவர் சாண்ட்ரா லூயிஸ். 37 வயதாகும் இவர், ஹாலிவுட் நடிகையான இவர், கடந்த 2016ம் ஆண்டு  தனது மார்பகங்களை மேலும் பெரிதாக்கும் வகையிலும், கச்சிதமான அழகை பெறும் வகையிலும், செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதன்படி, அவரது மார்பகத்தின் உள்ளே, செயற்கை கப்கள் பொருத்தப்பட்டன. ஆரம்பத்தில் அழகாகவும், பெரிய மார்பமாகவும் காட்சியளித்த சாண்ட்ராவுக்கு, போகப் போக, அந்த செயற்கை கப்களால் பெரும் பிரச்னை நிகழ ஆரம்பித்தது.  

ஆம், உடலின் மேல் பகுதியில் எதோ பாரம் ஏற்றி வைத்தது போல உணர ஆரம்பித்த அவர், அன்றாடம் விதவிதமான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். அடிக்கடி தலைவலி, மனநிலை மாற்றம், படபடப்பு, சிறுநீர்க்குழாய் தொற்று, உடலில் பூஞ்சை படர்தல், தலைமுடி கொட்டுதல் என பலவித பாதிப்புகளை சந்தித்த அவர், ஒருநாள் மருத்துவர்கள் உதவியுடன் செயற்கை மார்பகங்களை அகற்றியுள்ளார்.

அடுத்த சில மணிநேரத்திலேயே அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியிருக்கின்றன. இதனை உணர்ந்த சாண்ட்ரா லூயிஸ், செயற்கை மார்பகங்களை யாரும் நம்பி அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என, ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.