பட்ஜெட் போட்ட நிர்மலா சீதாராமன் வறுமையில் வாடுகிறாரா..? புகைப்பட ஆதாரம்.

இந்திய நாட்டில் பொருளாதாரம் சரியில்லை என்பது எல்லோருக்குமே தெரிகிறது. அது, நாட்டின் நிதியமைச்சர் வரையிலும் எதிரொலித்துள்ளது என்பதற்கு ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறார் முரளிதரன் எனும் காங்கிரஸ்காரர்.


இது குறித்து அவரது பதிவு வைரலாகியுள்ளது. அப்படி என்ன பதிவு தெரியுமா? இந்தியாவின் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது... ராகுல் காந்தி சொன்னார். அவர் எதிர்கட்சித்தலைவர் அப்படித்தான் சொல்லுவார் எனவே நம்பவேண்டாம்... ரகுராம் ராஜன் சொன்னார். அவர் மோடியின் மீது கோபமாயிருக்கிறார்

அதனால் அவரும் அப்படித்தான் சொல்லுவார் அதனால் நம்ப வேண்டாம். சரி சுப்பிரமணிய சாமி பா.ஜ.க.வின் எம்பி., ஆர்எஸ்எஸுக்கு வேண்டியவர் அவரே மோடியின் பொருளாதாரக்கொள்கை நாட்டிற்கு ஆபத்தானது என்று சொல்கிறாரே அடப்போங்க சார், அவருக்கு மந்திரி பதவி கொடுக்கலைனு காண்டு. அதனால் அவர் சொல்றத எல்லாம் நம்பமாட்டோம்...

அடப்பாவிகளா... மன்மோகன்சிங் சொன்னா... ஊகும் ப.சிதம்பரம்... செல்லாது செல்லாது  அப்ப கே எஸ் அழகிரி போப்போ அவர் மட்டும் ஆதரிச்சா பேசுவாரு.... அவங்க எல்லாமே எதிர்கோஷ்டி ஆளுங்க.... அவங்க ஆதரிச்சா பேசுவாங்க போங்க சார்..  சரி அவங்க சொன்னா ஏத்துக்க மாட்ட.... பட்ஜெட் தாக்கல் செஞ்ச.. நிர்மலாம்மா கைய பாத்தியா?

ஏன் கைக்கு என்ன? கைய நல்லா பாருய்யா போன வருசம் ரெண்டு வளையல் இருந்தது. ரெண்டா....சரி அதுக்கென்ன? போய்யா லூசு பொருளாதாரம் எந்த அளவுக்கு மோசமாயிடுச்சுன்னா, நிம்மி மாமி ஒரு வருசத்துல ஒரு வளையலை வித்துட்டாங்கங்கற அளவுக்கு மோசமாயிடுச்சு. அவங்க சிம்பாளிக்கா இப்படித்தான் சொல்லமுடியும். நம்பித்தொலைங்கய்யா!