கல்யாணத்தன்று கணவனின் கள்ளக்காதல் அம்பலம்! புதுப் பொண்டாட்டியின் விபரீத முடிவு! பதற வைக்கும் சம்பவம்!

மும்பையில் புதிதாக திருமணமான பெண் தனது கணவனுக்கு மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை அறிந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.


மும்பை மலாடில் உள்ள சிவனெரி சால் என்ற இடத்தில் புதிதாக திருமணமான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பெண் தூக்கிட்டுக் கொண்ட போது கணவனும் வீட்டில் இருந்தது தெரியவந்தது. 

போலீசாரின் விசாரணையில் தான் கழிவறைக்குச் சென்றிருந்ததாகவும் பின்னர் கதவைத் திறக்க முயற்சித்த போது கழிவறைக் கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது தெரியவந்ததாகவும் ராஜ் தெரிவித்தார். கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தபோது தனது மனைவி மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டு சடலமாகத் தொங்கியதாகவும் அவர் கூறினார். 

மேலும் விசாரணையில் ராஜும், ரூபாவும் நேபாளத்தைச் செர்ந்தவர்கள் என்றும், நடனக் கலைஞரான ராஜ் மும்பை அந்தேரியில் ஒரு நடனப் பள்ளியில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. அங்கு ரூபாவை ராஜ் சந்தித்த நிலையில் இருவரும் காதல் வயப்பட்டதும், இருவருக்கும் நேபாளத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் மும்பையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியதும் தெரிய வந்தது.  

இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் முன் ரூபா எழுதி வைத்திருந்த குறிப்பில் தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது தவறு என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்ய முற்பட்ட நிலையில் ரூபாவின் சகோதரர் ராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்ததாகத் தெரிவித்தார்.

ராஜின் துரோகமே ரூபாவின் தற்கொலைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். அதன் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக் ராஜ்மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்தனர்.