கல்யாணமான மறுநாள்..! புது மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்த கணவன்! பதற வைக்கும் சம்பவம்!

ஆந்திராவில் திருமணமான அடுத்த நாளே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரிக்குலம் மாவட்டத்திலுள்ள கருடாகண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் சுரேஷ் ஆவார். இவருக்கும் 28 வயதான தமயந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 

திருமணமான அடுத்த நாள் திருமண மண்டபத்திலிருந்து கணவன் வீட்டிற்கு செல்வதற்காக கணவருடன் மணப்பெண் தமயந்தி தயாராக இருந்தார். அந்த நேரத்தில் தமயந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார். 

இதனால் அச்சத்தில் அடைந்த அவரது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தமயந்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனைக்கு சென்ற பின் மருத்துவர்கள்  தமயந்தியை பரிசோதித்து அவர்  மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டார் என்ற தகவலை அவரது கணவனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த தமயந்தியின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்தே தமயந்தியின் உடலுக்கு அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருமே இறுதி சடங்கு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான அடுத்த நாளே மணப்பெண் உயிரிழந்தது அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.