குப்பை தொட்டிக்குள் பிறந்த குழந்தையின் கதறல்! சப்தம் கேட்டு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மதுரையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று குப்பை தொட்டியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் அருகேயுள்ள ஜீவா நகர் திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து பிறந்த சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள பொதுகுப்பைத் தொட்டி ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இந்நிலையில் அந்த வழியே சென்ற நபர் ஒருவர் உள்ளே எட்டிப் பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று அழுதுகொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உடனே அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் .

இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையை வெளியே எடுத்து முதலுதவி அளித்துள்ளனர். மற்றும் இது குறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் குழந்தையை மீட்டு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றும் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்ற பதிவேடுகளை விசாரணைக்காக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தையை இங்கு கொண்டு வந்து போட்டது யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.