2020 புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் திருமணம் நடப்பது உறுதி..! யார் யாருக்கு தெரியுமா?

2020ம் ஆண்டு உங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் காதல் எப்படி இருக்கும் என்பதை உங்கள் ராசியை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.


மேஷம் ராசி நேயர்களே வருடத்தின் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். பின்னர் போக போக சற்று கடினமாக இருக்கும். பின்னர் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் வீட்டை விட்டு சற்று விலகியே இருங்கள். காதலர்களுடனான உறவு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆண்டு நடுப்பகுதியில் மேலும் உறவு வலுப்பெறும். அதே சமயம் துணையுடன் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் சில சமயங்களில்மட்டும் மனக் கசப்பு வரும். 

ரிஷபம் ராசி நேயர்களே வரும் ஆண்டில் குடும்பத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. குடும்ப உறுப்பினர்களின் நடத்தை பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். ஆகஸ்ட்டிற்கு பிறகு பிரச்சனைகள் குறைந்து குடும்ப சூழ்நிலை மேம்படும். காதலர்களுக்கு வாழ்க்கை சாதகமாக இருக்கும். உறவில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.

மிதுனம் ராசி நேயர்களே வரும் ஆண்டு இயல்பை விட சிறப்பானதாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் குழப்பங்கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடகம் ராசி நேயர்களே திருமணம் ஆகாதவர்களுக்கு வரும் ஆண்டு சவாலனதாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் பல பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது. தனிமையில் இருப்பவர்கள் காதல் வயப்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம் ராசி நேயர்களே 2020ம் ஆண்டில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவ பல சிரமங்களை சந்திக்க நேரிடும். காதல் விவகாரத்தில் முன்னேற விரும்பினால் துணை யின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

கன்னி ராசி நேயர்களே 2020ல் திருமணம் ஆகாதவர்களுக்கு குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் அது சவாலாக இருக்கும். காதலர்கள் வாழ்க்கையில்ஏற்றத் தாழ்வு இருக்கும். உங்கள் அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும்.

துலாம் ராசி நேயர்களே 2020ல் குடும்பம் நல்ல முன்னேற்றம்அடையும். ஆண்டின் நடுவில் தொல்லைகள் வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்திற்கு எதிராக எதுவும் செய்யாதீர்கள். காதலர்களின் உறவு மேம்படும். அன்பை அதிகரிக்கும்.

விருச்சிகம் ராசி நேயர்களே 2020ல் குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையிலும் நியாயமான முடிவு பெறலாம்.

தனுசு ராசி நேயர்களே குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சரியான நேரத்தில் உறவுகள் ஆதரவு கொடுக்கும். காதல் வாழ்க்கையில் துணையுன் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள்.

மகரம் ராசி நேயர்களே 2020ல் குடும்ப வாழ்க்கை சாதாரணமாகத்தான் இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் அடிக்கடி எழும். ஆனால் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையை பொறுத்தவரையில் வரும் ஆண்டில் திருமணம் நடக்கும்.

கும்பம் ராசி நேயர்களே குடும்ப பிரச்சனையில் கலவையான முடிவுகள் கிடைக்கும். ஆண்டின் ஆரம்பத்தில் குடும்பத்தில் கசப்பு ஏற்படும். ஆண்டின் நடுப்பகுதியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். காதல் விஷயங்களில் வரும் ஆண்டு சிறப்பாக இருக்காது.

மீனம் ராசி நேயர்களே குடும்ப பிரச்சனையில் கலவையான முடிவுகள் கிடைக்கும். அதிகநேரம் குடும்பத்திற்கு ஒதுக்க முடியாது. காதலர்களுக்கு வரும் ஆண்டு சில பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.