முதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி! ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்! அதிர வைக்கும் சம்பவம்!

தர்மபுரி அருகே திருமணம் ஆன ஒரே நாள் இரவில், கணவன் மனைவி இடையேயான மனகசப்பில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன்  குமார்( வயது 29) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வந்துள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்த  சரண்யா (வயது 20) இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் நேற்று காலை மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று  குமாருக்கும், சரண்யாவுக்கும் மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனைவியை நினைத்து பல கனவுகளுடன் குமார் அறையில் காத்திருந்துள்ளார்.

பால் சொம்புடன் வந்த மனைவியை வாரி அணைக்க முற்பட சரண்யா மறுத்துள்ளார். மேலும் சரண்யா செக்சில் ஈடுபாடு இல்லாமல் நழுவியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் மனைவி சரண்யாவை வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார்.

இதனால் மனைவி சரண்யாவுக்கு கோபம் தலைக்கேறியுள்ளது. கணவனை அவர் அருகே நெருங்கவிடாமல் தடுத்துள்ளார். இதனால்  முதலிரவில் புதுக்கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பெரியோர்கள் வந்து சமாதானம் செய்து வைத்தனர். ஆனால் முதலிரவில் உல்லாசமாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கத்தில் குமார் மனமுடைநது   தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் இறந்து போன  குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.